உத்தரகாண்டில் தனது சொந்த செலவில் அரசுப் பள்ளியை சீரமைத்த கல்வி அதிகாரி!

டேராடூன் : உத்தரகாண்டில் கல்வி அதிகாரி ஒருவர் தனது சொந்த செலவில் மலைவாழ் மாணவர்கள் படித்து வரும் அரசுப் பள்ளியை புதுப்பித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் தரிகேட் பிளாக் எனும் மலை சார்ந்த பகுதி உள்ளது. இங்கு உள்ள அரசு பள்ளியில் சுற்றுவட்டார கிராம மாணவர்கள் பலர் பயின்று வருகின்றனர். மேற்கூரை இல்லாமல் மழை தண்ணீர் உட்புகும் நிலையில் இந்த பள்ளி இருந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மழைக்காலங்களில் பள்ளிக்குள் தண்ணீர் விழும் சூழலில் பள்ளி இருந்துள்ளது.

இந்நிலையில் இப்பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற துணை கல்வி அதிகாரியான கீதிகா ஜோஷி, பள்ளியின் அவலநிலையை கண்டு தனது சொந்த செலவிலேயே பள்ளியை புனரமைத்துள்ளார். மேலும் மாணவர்கள் குளிரில் இருந்து படிப்பதை பார்த்து அவர்களுக்கு ஸ்வெட்டரும் வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மேற்கூரை இல்லாததால் மழை நீர் வகுப்பறைக்குள் வரும் நிலை இருந்தது. எனவே என் சொந்த செலவிலேயே மலைவாழ் மாணவர்களின் பள்ளியின் மேற்கூரையை சீரமைத்தேன். பின்னர் பள்ளியின் நிலைமையும் சரியாக இல்லாததால் பள்ளியை புனரமைத்தேன் என்று கூறியுள்ளார்.

மற்ற பள்ளிகளுக்கும் இதுபோன்ற பணிகளை செய்ய ஆசிரியர்களை ஊக்குவித்ததாகவும், அதன்மூலம் கிடைத்த 2.5 லட்சம் பணத்தை மற்ற பள்ளிகளுக்கு தேவையானதை செய்தோம் என்றும் அவர் கூறினார். மேலும் இதற்காக வங்கிக் கணக்குடன் இணைத்து ரூபந்தரன் எனும் திட்டத்தை கீதிகா ஜோஷி தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின்மூலம் கிடைக்கும் பணத்தில் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பை செய்து வருகிறோம் என கூறினார். ரூபந்தரன் திட்டத்திற்காக எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் உதவிகள் செய்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தின் மூலம் அல்மோரா மாவட்டதில் உள்ள 14 பள்ளிகள் புனரமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: