அரசு நிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றை ஆக்கிரமித்தவர்கள் மீது கருணை காட்டக்கூடாது : உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை : அரசு நிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றை ஆக்கிரமித்தவர்கள் மீது கருணை காட்டக்கூடாது என்று  சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தை  சேர்ந்த லக்ஷ்மணன் என்பவர் தனக்கு கிடைத்த குடும்ப சொத்துக்கு பட்டா கேட்டு அங்குள்ள வட்டாட்சியரிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அரசு நிலம் எனக் கூறி பட்டா மறுக்கப்பட்டதால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், சம்மந்தப்பட்ட நிலத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் அரசு நிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றை ஆக்கிரமித்தவர்களுக்கு கருணை காட்டக் கூடாது எனவும் அரசு நிலங்கள் மக்கள் நலனுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். அதே போல ஆக்கிரமிப்பு நிலங்களை கண்டறிந்து மீட்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டங்களை நடத்த வேண்டும் எனவும் அரசு நிலத்திற்கு பட்டா பதிவு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: