எம்.எல்.ஏ கருணாஸ் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல்

சென்னை:  எம்.எல்.ஏ கருணாஸ் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் 26-ம் தேதி மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மற்றும் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  கருணாஸ் மீது காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸை போலீசார் கைது செய்தனர்.  மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட  எம்.எல்.ஏ கருணாஸ் கொலை மிரட்டல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 வழக்கு பிரிவுகளில் அக்டோபர் 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

பின்னர் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டு அங்கு இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார்.  இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ கருணாஸ் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: