அமெரிக்காவில் குழந்தைக்காக கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து கொன்ற காதல் ஜோடி

அமெரிக்கா: அமெரிக்காவில் வடக்கு டகோடா பகுதியில் உள்ள ஒரு ஆற்றின் அருகே சவான்னா கிரேவின்ட்  என்ற 22 வயது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த புரூக் கிரவுஸ் என்ற பெண்ணும் அவரது காதலர் வில்லியம் கோயனும் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட சவான்னா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் சவான்னாவின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.  

தங்களுக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக இத்தகைய கொடூர செயலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். பின்பு வாக்குமூலம் அடிப்படியில் இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். முன்னதாக வில்லியம் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் அங்கிருந்து ஒரு கயிற்றை கைப்பற்றினர். அதை டி.என்.ஏ. சோதனை மேற்கொண்ட போது அதை வைத்து சவான்னாவின் கழுத்தை வில்லியம் நெரித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: