இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதால் பாகிஸ்தானை பலவீனமாக நாடாக கருதக்கூடாது : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து

இஸ்லாமாபாத் : இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதால் பாகிஸ்தானை பலவீனமாக நாடாக கருதக்கூடாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து  தெரிவித்துள்ளார்.முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க விரும்புவதாக இம்ரான் தெரிவித்து இருந்தார்.  ஐநா. பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது.  இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி ஆகியோர் இம்மாத இறுதியில் செல்கின்றனர்.

அப்போது, இரு அமைச்சர்களும் சந்தித்து பேசலாம் என இம்ரான் விருப்பம் தெரிவித்தார்.இதை மத்திய அரசு கடந்த வாரம் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் காஷ்மீரில் கடந்த வெள்ளிக் கிழமை 3 போலீசாரை கடத்திச் சென்று  தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கும், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிந்தது. மேலும், காஷ்மீர் தீவிரவாதி பர்கான் வானியை புகழும் வகையில் 20 தபால் தலைகளை பாகிஸ்தான் வெளியிட்டது. இது, மத்திய அரசுக்கு கடும் ஆத்திரத்தையும், அதிருப்தியையும் அளித்தது. இதையடுத்து, அமைச்சர் சுஷ்மா சுவராஜ்- பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி இடையிலான சந்திப்பை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை விவகாரத்தில் இம்ரான் கான் அவசரப்பட்டதாக அந்நாட்டு எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். இந்நிலையில் லாகூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இம்ரான் கான், இந்திய தலைவர்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வருவார்கள் என நம்புவதாக தெரிவித்தார். நட்புறவை விரும்பும் பாகிஸ்தான் நாடை பலவீனமாக நினைத்து விடக் கூடாது என்றும் அவர் கூறினார். நட்புறவு ஏற்படுவதும் இரு நாட்டு மக்களுக்கும் நன்மை உண்டாக்கும் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: