சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு: பொதுமக்கள் வேதனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.99 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.ரூ.78.26-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும் மற்றும் டீசல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் உயந்துள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: