×

வாடஸ் ஆப் பயன்படுத்துவோர் குறைகளை கேட்க இந்தியாவுக்கு புதிய குறைகேட்பு அதிகாரி

புதுடெல்லி:  இந்தியாவில் குறைதீர்ப்பு அதிகாரியை வாட்ஸ் ஆப் நியமித்துள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்தியாவில் குறைதீர்ப்பு அதிகாரி ஒருவரை நியமிக்காததுடன் இந்திய சட்டத்திடடங்களுக்கு உட்படுவதில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்கள் மீது கடுமையான நிலைப்பாட்டை அரசு மேற்கொண்டு வருகின்றது.  மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்ஆப் தலைவர் கிரைஸ் டேனியலை கடந்த மாதம் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவரிடம் வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகள் பரவுவது உள்ளிட்ட பல தவறான செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில், இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயனர்களின் குறைகளை கேட்டறிவதற்காக கோமல் லஹிரி என்ற குறைகேட்பு அதிகாரியை வாட்ஸ் ஆப் நிறுவனம் நியமித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் மொபைல் ஆப் மூலமாக உதவியை பெறலாம். மேலும், இமெயில் மற்றும் கடிதம் மூலமாக தங்கள் புகார்களை கோமல் லஹிரிக்கு தெரிவிக்கலாம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New,Lesson,ask,VATAs users
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...