லாரி மோதியதால் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே நாலுகால் மண்டபத்தில் விரிசல்

திருச்சி: ஸ்ரீரங்கம் காவல்நிலையம் அருகே சைதன்ய மகாபிரபுவின் பாத முத்திரைகள் வைக் கப்பட்டுள்ள நாலுகால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை  கடந்துதான் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு செல்ல வேண்டும். 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மண்டபம் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. முக்கொம்பு  கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த இடத்தில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக டாரஸ் லாரிகளில் பாறாங்கற்கள் ஸ்ரீரங்கம் வழியாக தினமும்  முக்கொம்புக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நேற்றுமுன்தினம் இரவு டாரஸ் லாரி ஒன்று, ஸ்ரீரங்கம் வழியாக சென்ற போது பழமை வாய்ந்த இந்த மண்டபத்தில் எதிர்பாராதவிதமாக மோதியதில் மண்டபத்தின்  மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

பழமையான மண்டபம் என்பதால் மண்டபத்தின் உள்பகுதியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு 2 தூண்கள் வெளிப்புறம் சாய்ந்த நிலையில் உள்ளது. மண்டபம்  எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அப்பகுதியில் சென்று விடக்கூடாது என்பதற்காக ஸ்ரீரங்கம் போலீசார் மண்டபத்தை சுற்றி இரும்பு  வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: