பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை குமரி துறைமுக திட்டம் குறித்து முதல்வர் பேசாதது வருத்தமளிக்கிறது

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் அமைய இருக்கும் வர்த்தக துறைமுகம் தொடர்பாக, நாகர்கோவிலில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர்  பேசாமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது  என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

கூறினார். நாகர்கோவிலில் மத்திய அரசின் ஆரோக்கிய பாரதம் பாதுகாப்பு திட்டத்தை (ஆயுஷ்மான் பாரத்) தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  நிருபர்களிடம் கூறியதாவது :பிரதமர் மோடியின் முக்கிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நடிகர் கருணாஸ் கைது நடவடிக்கையை பொறுத்தவரை, பேசக்கூடிய பேச்சுக்கள், நடக்கும் நடத்தைகள் அதன் அடிப்படையில் சட்டம் செயல்படுகிறது.

சட்டம்  பொதுவாக உள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட நபருக்கு என்று தனியாக சட்டம் இல்லை. கருணாஸ் கைது செய்யப்பட்டது, அவரது பாதுகாப்புக்காக கூட இருக்கலாம். குமரி  மாவட்டத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். நான் இந்த நிகழ்ச்சியில்  பேசுகையில், இந்த கோரிக்கையை வைத்தேன். அதே சமயத்தில் குமரி மாவட்டத்தில் துறைமுகம் தொடர்பாக முதல்வர் பேசாமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது  என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: