கரூர் அருகே பயங்கரம் வீடுகளில் திருடியதாக சந்தேகித்து சிறுவன் அடித்துக்கொலை

கரூர்:  கரூர்  மாவட்டம் வெள்ளியணை அருகே அல்லாலிகவுண்டனூர் பகுதியில் வசிப்பவர்  இஞ்சியம். இவரது கணவர் பழனிசாமி இறந்துவிட்டார்.  இவரது மகன் பாலசுப்பிரமணியம்(15). மகள் நந்தினி(5). இளஞ்சியம் கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை வளர்த்து வந்தார். பாலசுப்பிரமணியம் 8ம் வகுப்பு வரை  படித்துள்ளார். அதன்பின் 2 ஆண்டுகளாக அவர் பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.  ஒரு  வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு திருட முயற்சி நடந்தது. மற்ெறாரு வீட்டில் செல்போன்  திருடுபோனது. சிலர் பாலசுப்பிரமணியம்தான் திருடியிருப்பார் என  சந்தேகித்தனர்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் இளஞ்சியம், மகள் நந்தினியுடன் வெளியூர் சென்றுவிட்டார். வீட்டில் பாலசுப்பிரமணியம் மட்டும் இருந்தார். அப்போது  வீட்டுக்கு வந்த ஊர் மக்களில் சிலர் பாலசுப்பிரமணியத்தை அழைத்து திருட்டு குறித்து விசாரித்தனர்.

அவர் சரிவர பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இதையடுத்து அவரை வீட்டில் உள்ள தூணில் கட்டி  வைத்து சரமாரியாக அடித்தனர். இதில் வலி தாங்க முடியாமல் கதறி  துடித்த பாலசுப்பிரமணியம் சிறிது நேரத்தில்  துடிதுடித்து உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்நிலையில் வெளியூர்  சென்றிருந்த இளஞ்சியம் நேற்று காலை மகளுடன் வீடு திரும்பினார். அங்கு தூணில் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் மகன் இறந்து  கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். தகவல் அறிந்து வந்த வெள்ளியணை போலீசார்,  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக அரசு  மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஊரில் நடந்த தொடர் திருட்டு  சம்பவங்கள் குறித்து புகார்அளித்தும் போலீசார் விசாரணை நடத்தவில்லை.  இதனால்தான்  பொதுமக்களே சந்தேகப்பட்டு சிறுவனை  தாக்கியதாக தெரிகிறது, இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: