தமிழகத்தில் எங்கும் தடையின்றி மின்சாரம் விநியோகம்: விக்ரம் கபூர், தமிழ்நாடு மின்சார வாரிய சேர்மன்

அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக கொண்டு வரப்படுகிறது. இங்கு, கப்பலில் இருந்து நிலக்கரி  இறக்குவதற்கான பணியை சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் செய்த நிறுவனத்திற்கு கூடுதலாக  மின் வாரியம் பணம்  கொடுத்திருப்பதாக தணிக்கை துறை ேகள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மின்வாரியத்திடம் தணிக்கை துறை  சந்தேகம் தான் தெரிவித்துள்ளது. மற்றப்படி கூடுதலாக பணம் கொடுத்தது இன்னும் நிரூபனம் ஆகவில்லை.   மின்வாரியம் சார்பில் ஒப்பந்த நிறுவனத்திற்கு எதற்காக, பில் தொகை செட்டில் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை தணிக்கைத்துறையிடம் தரவுள்ளது.  அதன்பிறகு தான் தணிக்கைத்துறை தனது இறுதி முடிவை தெரிவிக்கும். அதுவரை இது ஒரு சந்தேக இழப்பாக தான் கருத முடியும். தணிக்கைத் துறை தனது அறிக்கையை  சட்டப்பேரவையில் வைக்கும் போது, அதன் உண்மை தன்மை தெரிய வரும். மின்வாரியம் சார்பில் கூடுதலாக பணம் கொடுத்திருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட  நிறுவனத்திடம் இருந்து பணத்தை கண்டிப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை பணம் கொடுக்கப்பட்டதாக கூறுவது கற்பனை தான்.  நிலக்கரி இறக்குவதற்கு புதிதாக டெண்டர் விடாததற்கு ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்ததே முக்கிய காரணம். அதனால், தான் இந்த நிறுவனத்திற்கு  டெண்டர் நீட்டிப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அந்த நிறுவனம் மீது புகார் வந்தால் கூட உடனடியாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. உரிய விதிகள்  எல்லாம் பின்பற்றி  தான் உரிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

 தற்போது புதிதாக ஒப்பந்தம் விட்டு தான் புதிய ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய முடியும். அதுவரை இந்த நிறுவனம் மூலம் நிலக்கரி இறக்கப்படுகிறது.  தற்போது  இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தால் நிலக்கரி இறக்குவதில் சிக்கல் ஏற்படும். விரைவில் டெண்டர் விடப்பட்டு புதிதாக ஒப்பந்த நிறுவனம் தேர்வு  செய்யப்படவுள்ளது. இந்த எண்ணத்தில் தான் நிலக்கரி இறக்குமதி விஷயத்தில் புதிய முடிவுகள் எதையும் எடுக்கவில்லை.  நிலக்கரி இறக்குமதி மற்றும் பற்றாக்குறையால் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் தகவல்கள்  எதுவும் உண்மையில்லை. தமிழகத்தில் எந்த  இடத்திலும் மின்வெட்டு இல்லை; அரசு அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை. எங்கும் மின்சாரம் தடையின்றி கிடைத்து வருகிறது. நிலக்கரி விஷயத்தால் தான் பாதிப்பு என்று கூறும் கருத்து சரியல்ல; மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி பற்றாக்குறை இருப்பதை அரசு சொன்னதே தவிர, அதனால்  பாதிப்பு உடனே ஏற்படும் என்பது இல்லை.  போதுமான நிலக்கரி  கையிருப்பு குறைந்து விடக்கூடாது என்பதால் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள மின்வாரியத்தின் ஆடிட் பிரிவு நடத்திய தணிக்கையில், காற்றாலையில் மின்சாரம்  பெறாமலேயே போலியாக கணக்கு காட்டி இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக மின்வாரியம் சார்பில் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்  மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், அந்த தொகையை மீட்கும் நடவடிக்கையில் மின்வாரியம் இறங்கியுள்ளது.  மின்வாரியத்தின் ஆடிட் பிரிவு தான் அனைத்தையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து அந்த ஆடிட் பிரிவு சார்பில் மின்வாரிய அதிகாரிகளின்  செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: