நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக செயற்கை பற்றாக்குறை உருவாக்குகிறதா மின்வாரியம்

ஒரு பக்கம் நிலக்கரி பற்றாக்குறை; இன்னும் ஒரு நாள் தான் கையிருப்பு உள்ளது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதிய விவகாரம்;  இதற்கிடையே, நிலக்கரியை கப்பலில் இருந்து சப்ளை செய்யும் ஒப்பந்த கம்பெனிக்கு கூடுதல் பணம் தந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள். இவ்வளவுக்கு இடையே  தமிழகத்தில் ஆங்காங்கு மின்வெட்டு பரவலாக நடைமுறைக்கு வந்து விட்டது. நிலக்கரியை கொண்டு வரும் ரயில் சரக்கு பெட்டிகள் பற்றாக்குறை தான் நிலக்கரி வரத்து  பற்றாக்குறைக்கு காரணமா? இல்லை, இறக்குமதி செய்ய தமிழக அரசு திட்டம் போடவே இப்படி செயற்கை பற்றாக்குறை ஏற்படுத்த முயற்சிக்கிறதா  என்ற  கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர். அதற்கேற்ப, டெல்லிக்கு போய் மின்துறை அமைச்சர் பேசிவிட்டு வந்துள்ளார். ஏற்கனவே பல சிக்கல்களில் சிக்கி தவிக்கும்  மின்வாரியம் இப்போது நிலக்கரி விவகாரத்திலும் சிக்கி தவிக்கிறது. அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை 21 நாள் சேமித்து வைக்க வேண்டும் என்று  இருந்தும், தமிழக அரசு மெத்தனமாக இருந்து விட்டது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு உள்ளது. என்ன தான் நடக்கிறது? இதோ நான்கு தரப்பில்  அலசுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: