நகர விற்பனை குழு தேர்தல் போட்டியிட்ட அனைவரும் தேர்வு

சென்னை:  தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல் சட்டத்தை கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு  இயற்றியது. இதனைப்பின்பற்றி தமிழ்நாடு அரசு 2015ம் ஆண்டு தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபாரம் முறைப்படுத்துதல் விதிகளை  உருவாக்கியது. இதன்படி, சென்னை தெருவோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அதன்மூலம்  39 ஆயிரம் கடைகள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் பயோ மெட்ரிக்  முறையில் பதிவு  செய்யப்பட்டு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தெருவோர வியாபாரிகள் சட்ட விதிகளின் படி, நகர விற்பனை குழுவை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.   விதிகளின்படி இந்த குழுவிற்கு மண்டல அதிகாரி தலைவராக இருப்பார். மண்டல செயற்பொறியாளர், இரு காவல் துறை அதிகாரிகள் நியமன அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுவர். இதைத் தவிர்த்து   தெருவோர வியாபாரிகள் 6  பேர் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இதன்படி, 6 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 20ம் ேததி நடைபெற்றது. முதற்கட்டமாக 1, 2, 3, 6, 7, 8, 11, 14, 15 ஆகிய 9 மண்டலங்களில்  இந்த தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் மூலம் 9 மண்டலங்களுக்கான  நகர விற்பனை குழு தேர்வு செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள 6 மண்டலங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும்  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: