×

முதல்வர், போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசிய நடிகர் கருணாஸ் சிறையிலடைப்பு

* புழலில் இருந்து வேலூருக்கு திடீர் மாற்றம்
* அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை: தமிழக முதல்வர், காவல்துறை உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில், திருவாடானை எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸை நேற்று  அதிகாலை நுங்கம்பாக்கம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். எழும்பூர் மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி வரும் அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில்  போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு கருதி அவர் நேற்று வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். செல்வநாயகம் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து  கொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவரும், திருவாடானை  சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் தி.நகர்  துணை கமிஷனர் அரவிந்தனை “நான் அன்றைக்கே அவரது டவுசரை கழட்டியிருப்பேன், வேண்டுமென்றால் காக்கிச் சட்டையை கழற்றி வைத்து விட்டு வாருங்கள்  பார்க்கலாம்’’ என்று பேசினார்.அத்துடன் வன்முறையை தூண்டும் விதமாகவும் மேலும் தனது கட்சியினரிடம் கொலை செய்ய வேண்டுமானாலும் என்னிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள். நான்  உங்களை காப்பாத்துகிறேன். நீ எங்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களை அடித்தால் நான் உங்கள் கை, கால்களை உடைப்பேன் என்று காவல்துறை அதிகாரிகளை  மிரட்டும் வகையில் பேசினார்.சமீபத்தில் நடந்த பசும்பொன் முத்துராமலிங்கதேவர் குருபூஜை நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது முதல்வர் அங்கு  வந்ததாகவும், அந்த இடத்தில் கருணாஸ் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் போலீஸ் அதிகாரிகள் நீங்கள் இங்கு நிற்க வேண்டாம் என்று  கருணாஸிடம் சொன்னதாகவும், ஏன் என்று கேட்டதற்கு நீங்கள் முதலமைச்சரை அடித்து விடுவீர்கள், முதல்வர் உங்களை கண்டு பயப்படுகிறார் என்று சில  அதிகாரிகள் சொன்னதாகவும், வேண்டுமானால் அந்த அதிகாரிகளிடம் போன் போட்டு கேட்டுப் பார், முதல் அமைச்சரே நான் அடிப்பேன் என்று பயப்படுகிறார்  என்றும் ஆகையால் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்று அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.


முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரி என இருவர் மீது சர்ச்சைக்குரிய வகையிலும் மிரட்டும் தொனியிலும் பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள்  கண்டனங்கள் தெரிவித்தன. மேலும், கருணாஸை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
முதலமைச்சர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய நடிகர் கருணாஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ்  கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், சமூக வலை தளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப்புகளில் வைரலாக பரவி இரு சமூகத்திற்கும் இடையே  மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து நடிகர் கருணாஸ் மீது உதவி ஆய்வாளர் ராஜசேகரன் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  அந்த புகாரின் பேரில் போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உரிய நடவடிக்கை எடுக்க நுங்கம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நுங்கம்பாக்கம் போலீசார் ஆர்ப்பாட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது நடிகர் கருணாஸ் முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் நடிகரும், திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் மீது ஐபிசி 153, 153(A)(1)(b)(c),307, 506(i),120(b), சிட்டி போலீஸ் ஆக்ட் 41 உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இதை தொடர்ந்து கருணாஸை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனால், கருணாஸ் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் பரவியது. பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை கருணாஸ் ெதாலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது போலீசார் என்னை கைது செய்து பார்க்கட்டும் என்று மிரட்டும் ெதானியில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கருணாஸ் எம்எல்ஏ என்பதால் அவரை கைது செய்ய ேபாலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சார்பில் சபாநாயகரிடம் அனுமதி கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவரது பேச்சு அடங்கிய வீடியோவும் சபாநாயகரிடம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவரை கைது செய்ய சபாநாயகர் அனுமதி அளித்ததாக தெரிகிறது.இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவருடன் முக்குலத்தோர் புலிப்படை மாநில அமைப்பு செயலாளர் செல்வநாயகம்(48), நெடுமாறன், கார்த்திக் ஆகியோரையும் கைது செய்தனர். கருணாஸ்  கைது செய்யப்பட்ட தகவலை தொடர்ந்து, அவரது வீடு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் கூடி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருணாஸை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பிறகு நடிகர் கருணாஸ் மற்றும் செல்வநாயகம் ஆகிய இருவரை மட்டும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

பின்னர், அவர்களை எழும்பூர் நீதிபதி குடியிருப்பில் உள்ள எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற 13வது மாஜிஸ்திரேட் கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கருணாஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜா, கருணாஸ் எந்த வித கொலை முயற்சியிலும் ஈடுபடவில்லை. அப்படி இருக்கும் போது கருணாஸ் மீது ஐபிசி 307 பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே போலீசார் வேண்டும் என்றே கருணாஸ் மீது 307 சட்ட பிரிவை பதிவு செய்துள்ளனர். இதனால் 307 சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.
பின்னர், இருதரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட் கோபிநாத் கருணாஸ் மீது பதியப்பட்ட 307 சட்ட பிரிவை நீக்கி மீதமுள்ள 7 பிரிவுகளின் கீழ் வரும் அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைதொடர்ந்து நடிகர் கருணாஸ் மற்றும் செல்வநாயகம் ஆகிய இருவரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று மாலை 3.30 மணிக்கு அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அதேநேரத்தில் செல்வநாயகம் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Actor,Karunas,jailed,speaking to police chiefs
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...