×

மல்லிகை கிலோ ரூ.300 ஆனது

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து ஓரளவு இருந்தாலும் விற்பனை மந்தமடைந்துள்ளது. இதில், ஒருகிலோ மல்லிகை ₹300ஆக  குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  பொள்ளாச்சி தேர்நிலை பூ மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து மட்டுமின்றி மடத்துக்குளம், உடுமலை, கணியூர் நிலக்கோட்டை, கரூர், பழனி,  திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல பகுதியிலிருந்து பூக்கள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. இங்கு வரும்  பூக்களை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, கேரள மாநில பகுதி வியாபாரிகள் மொத்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.   இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை தொடர்ந்து பருவமழை பெய்ததால், அப்போது பூக்கள் வரத்து மிகவு குறைவாக இருந்தது. இதனால், பூக்கள் கூடுதல் விலைக்குவிற்பனை  செய்யப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கத்தால், இந்த மாதம் துவக்கத்திலிருந்து மீண்டும் பூக்கள் வரத்து அதிகரித்தது. இருப்பினும், அவ்வப்போது சுபமுகூர்த்த நாட்கள் மற்றும்  விநாயகர் சதுர்த்தி என தொடர்ந்து இருந்ததால் மல்லிகை மற்றும் முல்லை, ஜாதி முல்லை உள்ளிட்ட பூக்கள் ஒருகிலோ ₹800 முதல் ₹1000 வரை விற்பனை  செய்யப்பட்டது.

 தற்போது மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து ஓரளவு இருந்தாலும், புரட்டாசி மாதம் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் இல்லாததாலும் அனைத்து ரக  பூக்களின் விலை சரிய துவங்கியுள்ளது. இதில் கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு பூக்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. நேற்றும் வாடிக்கையாளர்கள்  குறைந்த அளவில் இருந்ததால், மார்க்கெட் வெறிச்சோடியது. இதனால் ஒருகிலோ மல்லிகை மற்றும் முல்லை ₹300க்கும், ஜாதிமுல்லை ₹250க்கும், அரளி ₹80க்கும், சில்லி  ரோஸ் ₹120க்கும், செண்டுமல்லி ₹50 என குறைந்த விலைக்கு விற்பனையானது. இந்த நிலை புரட்டாசி மாதம் நிறைவடையும் வரை இருக்கும் என வியாபாரிகள்  தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jasmine,Rs.300,kg
× RELATED நாடாளுமன்ற ஊழியர்கள் மேலும் 300 பேருக்கு கொரோனா