பான் பசிபிக் ஓபன் பிளிஸ்கோவா சாம்பியன்

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்ற பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் உள்ளூர் வீராங்கனையும், சமீபத்தில் நடந்த யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவருமான நவோமி ஒசாகாவுடன் (20 வயது) பிளிஸ்கோவா (26 வயது) மோதினார்.தனது அதிரடி சர்வீஸ்களால் ஒசாகாவை திணறடித்த பிளிஸ்கோவா 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

இரண்டாவது செட்டிலும் ஒசாகாவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடிட்ட அவர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இப்போட்டி 1 மணி, 3 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. பிளிஸ்கோவா  வென்ற 11வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.சொந்த மண்ணில் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ஒசாகா இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து கூறுகையில், ‘என் வாழ்க்கையில் இந்த அளவுக்கு சோர்வாக உணர்ந்தது இல்லை. மிகவும் பலவீனமாக இருக்கிறேன்.  தற்போதைய நிலையில், அடுத்த தொடரில் விளையாடும் வாய்ப்பு மிகக் குறைவு’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: