அக்டோபர் 3, 4ம் தேதிகளில் அதிமுக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: திமுக அறிவிப்பு

சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக வருகிற 3, 4ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி., ஆ.இராசா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:மக்கள் நலன் மறந்து கமிஷன்-கலெக்ஷன்- கரப்ஷன் என தமிழகத்தில் ஊழல்ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடத்திட வேண்டுமென தலைமைக் கழகம் முடிவு எடுத்துள்ளது.இதையொட்டி வருகிற அக்டோபர் 3, 4 தேதிகளில் சொற்பொழிவாளர்களைக் கொண்டு “கண்டனப் பொதுக்கூட்டங்களை”, அந்தந்த மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளின் துணையுடன் எழுச்சியோடு நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில், சென்னை பூந்தமல்லி- பொருளாளர் துரைமுருகன், திருத்தணி- முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, கடையநல்லூர்-துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, எம்.எல்.ஏ. குளித்தலை-துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், வாலாஜாபாத்-துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, வேலூர் - ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மதுரை-திருச்சி சிவா, எம்.பி., ஒட்டன்சத்திரம்- ஆ.இராசா, செஞ்சி - டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., திருச்சி- க.பொன்முடி, எம்.எல்.ஏ., காங்கயம்- எ.வ.வேலு, எம்.எல்.ஏ. அண்ணா நகர் - தயாநிதி மாறன், அம்பத்தூர்-வாகை சந்திரசேகர், எம்.எல்.ஏ. ஆகியோர்  உரையாற்றுகின்றனர்.அக்டோபர் 4ம் தேதி புரசைவாக்கம் (தானா தெரு)-பொருளாளர் துரைமுருகன், திருவொற்றியூர்- நடிகர் ராதா ரவி ஆகியோரு கண்டன உரையாற்றுகின்றனர். இதே போல மாநிலம் முழுவதும் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பங்கேற்போர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: