ரபேல் விமான கொள்முதலில் மத்திய பாஜ ஆட்சியால் ரூ.41 ஆயிரம் கோடி நஷ்டம்: புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

சென்னை: ரபேல் விமான கொள்முதலில் பாஜவால் நாட்டிற்கு ரூ.41 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புதுவை முதல்வர் நாராயணசாமி  குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் இரவு 11.34 மணி விமானத்தில்  டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அப்போது அவர்  நிருபர்களுக்கு அளித்த பேட்டி :பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை, மத்திய அரசிடம் தான் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜ  தலைமையிலான மத்திய அரசின் தவறான அணுகு முறைதான் காரணம்.  காங்கிரஸ் ஆட்சியின்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை 160 டாலராக இருந்தது. அப்போது நாங்கள் ரூ.60 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை  செய்தோம். தற்போது 90 டாலர் தான். இப்போது ரூ.45 ரூபாய்க்கு பெட்ரோலை விற்கலாம் ஆனால் ரூ.85ம் தாண்டி இருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை  உயரவில்லை.

ஆனால் பெட்ரோல் விலை உயர்கிறது. இதற்கு காரணம் 11 லட்சம் கோடி ரூபாயை கடந்த 4 ஆண்டுகளாக மக்களுடைய பணத்தை மத்திய அரசு தனது  கஜானாவில் நிரப்பிக் கொண்டிருப்பதுதான். மத்திய அரசு மிகப்பெரிய சுமையை  மக்கள் மீது சுமத்துகிறது. விலைவாசி ஏறுவதற்கு பாஜவின் தவறான பொருளாதார  கொள்கைதான் காரணம். ரபேல் போர் விமானம் வாங்குவதில் நடக்கும் ஊழலை காங்கிரஸ், தொடர்ந்து 6 மாதங்களாக கூறி வருகிறது. இதில் இந்தியாவிற்கு ரூ.41 ஆயிரம் கோடி நஷ்டம்  ஏற்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் பிரதமர் நரேந்திரமோடி அறிக்கை விடுவார். ஆனால் ரபேல் போர் விமான குற்றச்சாட்டு குறித்து பிரதமர் ஏன் வாய் திறக்கவில்லை. இது மத்திய அரசின் மிகப்பெரிய இமாலய ஊழல். இது சம்மந்தமாக நாடாளுமன்ற  நிலைக்குழு விசாரித்து யார் தவறு செய்தார்களோ, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மொத்தத்தில் பாஜவிற்கு இறுதி காலம் நெருங்கிவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: