வெளிமாநில மது வரவை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

சென்னை: வெளிமாநில மதுவகைகள் தமிழகத்திற்குள் வருவதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது: தமிழகத்திற்குள் நாள்தோறும் வெளிமாநில மதுவகைகளின் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா மாநில மதுபான வகைகளே சென்னைக்குள்  கொண்டுவரப்பட்டு இங்கிருந்து திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் அரசுக்கு கோடிக்கணக்கில்  வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் பணியில் சுங்கசாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பனியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வெளி  மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு உள்ளே வரும் மதுவகைகளை தடுக்கவும், அதை கண்டறியவும் சிறப்பு கண்காணிப்பு படையினரை டாஸ்மாக் நிர்வாகம்  அமைத்துள்ளது. விழுப்புரம் மற்றும் கடலூர் பார்டரில் இருந்து மதுபாட்டில்கள் உள்ளே வருவதை தடுக்க கடந்த 3 நாட்களாக இந்த கண்காணிப்பு குழுவினர் ஈடுபட்டு  வருகின்றனர். 25 பேர் கொண்ட குழு இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது.  இவ்வாறு கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: