‘எம்டிய பாக்கனும்னா மட்டும் நீட்னஸா போக சொல்றீங்க’டிரைவர் சீட்டுல தண்ணி ஒழுகினா எப்படி பஸ்சை ஓட்ட முடியும்?

„ *வாட்ஸ்அப்பில் பரவும் வீடியோ

„ *மாநகர பேருந்தின் அவலத்தை போட்டுடைத்த டிரைவர்

சென்னை: சென்னை மாநகர பஸ்சின் அவலத்தை டிரைவர் ஒருவரே  பேசி வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் 3,439 மாநகர பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இதில் 70 சதவீதம் பஸ்கள் போக்குவரத்துக்கு லாயக்கில்லாத காலாவதி பஸ்கள் ஆகும்.   லேசான மழைக்கே மாநகர பஸ்களில் தண்ணீர் ஒழுகும். பஸ்சுக்குள்ளேயே பயணிகள் குடை பிடித்து செல்லும் அவலமும் அரங்கேறுகிறது. நாகரீக வளர்ச்சிக்கேற்ப  தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் உள்ளனர். அதன்படி, அரசு பஸ்களின் அவலத்தை அவ்வப்போது செல்ேபானில் படம்  பிடித்து பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறன்றனர். இந்த நிலையில், சென்னையில் அரசு பஸ் ஓட்டுனர் ஒருவரே மாநகர பஸ்சின் அவலத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பு  ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.அந்த வீடியோவில் டிரைவர் பேசியதாவது:

எல்லோருக்கும் வணக்கம். இந்த வண்டி எம்டிசி கண்ணகி நகர் பணிமனையில் ஓடுது. கண்ணகி நகர்-தாம்பரம் வழித்தடத்துல இந்த ஒரு வண்டி தான் ஓடுது. இந்த வண்டி  மழை காலத்தில் எல்லா இடத்திலும் ஒழுகும். மெயினா, டிரைவர் சீட்டில் அதிகம் ஒழுகும். டிரைவர் சீட் இல்லாம, பயணிகள் யாரும் உட்கார முடியாத அளவுக்கு எல்லா  இடத்திலும் ஒழுகும். இந்த மாதிரி டிரைவர் பக்கத்தில் தண்ணீர் ஒழுகுனா எப்படி வண்டி ஓட்டுறது. அதுமட்டுமில்ல, பப்ளிக் எதிர்ல இந்த மாதிரி ஒரு யூனிபார்ம்  போட்டுட்டு போனா எப்படி மரியாத கிடைக்கும். எம்டிய பார்க்கனும்னா மட்டும், அட்மின் ஆபீசர பார்க்கனும்னா மட்டும் நீட்னஸா போக சொல்றாங்க. அதுக்கு கிளாஸ் வேற  எடுக்குறாங்க. தோழர்களே இந்த வண்டிய பாருங்க, என் நிலைமைய பாருங்க. இந்த வண்டிக்கு தார்பாய் ஒட்ட 4 மாசமா சொல்லிட்டுருக்கேன். இப்படி இருந்தால் எப்படி வண்டி  ஓட்டுறது. இவ்வாறு அந்த டிரைவர் வீடியோவில் பேசுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: