புரட்டாசி விரதம் எதிரொலி சிக்கன், மட்டன் விலை குறைவு: காய்கறி விற்பனை சூடுபிடித்தது

சென்னை: புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று,  இறைச்சிக் கடைகளில் விற்பனை  மந்தமாகவே இருந்தது. மீன்கள் வரத்து  அதிகரிப்பால் விலை குறைந்தது.பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பெரும்பாலான இந்துக்கள், இந்த  மாதத்தில் விரதம் இருப்பார்கள். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள்.இதனால் புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிக்கன், மட்டன் விற்பனை சென்னை, திருவள்ளூர், கா்ஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மந்தமாகவே  இருந்தது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை காசிமேடு, சிந்தாதரிப்பேட்டை, வானகரம், காஞ்சிபுரம் மீன் மார்க்கெட், திருவள்ளூர் பெரியகுப்பம் மீன்  மார்க்கெட்டில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. விற்பனை குறைந்தாலும் சிக்கன், மட்டன் விலையும் குறைந்தது. ரூ.160க்கு விற்ற சிக்கன்  ஒரு கிலோ ரூ.140க்கும்,  மட்டன் ரூ.480க்கும் விற்கப்பட்டது. மீன்களின் விலை கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை குறைந்தது. சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.600 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் மீன், தற்போது ரூ.400 முதல் ரூ.420  வரை விற்பனையாகிறது.

இதேபோல வவ்வால் மீன் கிலோவுக்கு ரூ.150 குறைந்து ரூ.300க்கும், கொடுவா மீன் ரூ.80 குறைந்து ரூ.220க்கும் விற்கப்பட்டது. இறால் கிலோவுக்கு ரூ.50 குறைந்து ரூ.200க்கு  விற்கப்பட்டது.மீன், சிக்கன், மட்டன் விற்பனை மந்தமாகியுள்ள நிலையில், காய்கறிகளின்  விற்பனை சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து மீன் மார்க்கெட் வியாபாரிகள்  கூறும்போது, ‘’மார்க்கெட்களில் மீன்கள் வரத்து அதிகமாக இருக்கிறது. அதனால் விலை குறைந்துள்ளது. ஆனால், விற்பனைதான் கொஞ்சம் மந்தமாக இருக்கிறது  என்றனர்.சிக்கன், மட்டன் விற்பனையாளர்கள் கூறும்போது, ‘இந்த ஆண்டு கோழி விலை மட்டும் குறைந்துள்ளது. அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. அப்போது சிக்கன்,  மட்டன் விலை உயர வாய்ப்புள்ளது. அந்த பண்டிகையைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறோம்’’ என்றனர்.

அக்டோபர் 3, 4ம் தேதிகளில் அதிமுக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: திமுக அறிவிப்பு

சென்னை, செப். 24: அதிமுக அரசுக்கு எதிராக வருகிற 3, 4ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி., ஆ.இராசா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

மக்கள் நலன் மறந்து கமிஷன்-கலெக்ஷன்- கரப்ஷன் என தமிழகத்தில் ஊழல்ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடத்திட வேண்டுமென தலைமைக் கழகம்  முடிவு எடுத்துள்ளது.

இதையொட்டி வருகிற அக்டோபர் 3, 4 தேதிகளில் சொற்பொழிவாளர்களைக் கொண்டு “கண்டனப் பொதுக்கூட்டங்களை”, அந்தந்த மாவட்ட செயலாளர்கள்,  பொறுப்பாளர்கள் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளின் துணையுடன் எழுச்சியோடு நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில், சென்னை பூந்தமல்லி- பொருளாளர் துரைமுருகன், திருத்தணி- முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு,  கடையநல்லூர்-துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, எம்.எல்.ஏ. குளித்தலை-துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், வாலாஜாபாத்-துணைப்  பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, வேலூர் - ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மதுரை-திருச்சி சிவா, எம்.பி., ஒட்டன்சத்திரம்- ஆ.இராசா, செஞ்சி - டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., திருச்சி-  க.பொன்முடி, எம்.எல்.ஏ., காங்கயம்- எ.வ.வேலு, எம்.எல்.ஏ. அண்ணா நகர் - தயாநிதி மாறன், அம்பத்தூர்-வாகை சந்திரசேகர், எம்.எல்.ஏ. ஆகியோர்  உரையாற்றுகின்றனர்.அக்டோபர் 4ம் தேதி புரசைவாக்கம் (தானா தெரு)-பொருளாளர் துரைமுருகன், திருவொற்றியூர்- நடிகர் ராதா ரவி ஆகியோரும் கண்டன உரையாற்றுகின்றனர்.  இதே போல மாநிலம் முழுவதும் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பங்கேற்போர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: