மகளிர் கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

பிரிட்ஜ்டவுன்: தென் ஆப்ரிக்க மகளிர் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 115 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக பார்படாஸ் கென்சிங்டன் ஒவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 292 ரன்  குவித்தது. தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 117 ரன் விளாசினார். கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 46, தியாந்த்ரா டோட்டின் 59 ரன் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க மகளிர் அணி 42.3 ஓவரில் 177 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

லாரா வுல்வார்ட் 54, கேப்டன் டேன் வான் நியகெர்க் 77 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில்  அணிவகுத்தனர். வெஸ்ட்  இண்டீஸ் பந்துவீச்சில் டோட்டின் 4 விக்கெட் கைப்பற்றினார். அந்த அணி 2 புள்ளிகள் பெற்றது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என டிரா ஆனது. அடுத்து இரு அணிகளும் 5  போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி இதே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: