×

ராஜஸ்தானை வீழ்த்தியது தமிழகம்

சென்னை: டிஐ சைக்கிள்ஸ் மைதானத்தில் நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழக அணி 1 விக்கெட் வித்தியாச்த்தில் ராஜஸ்தான் அணியை போராடி வென்றது.டாசில் வென்ற தமிழகம் முதலில் பந்துவீச, ராஜஸ்தான் 37.1 ஓவரில் 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தஜிந்தர் சிங் 55, கேப்டன் மெனரியா 13, லம்பா 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில்  வெளியேறினர். தமிழக பந்துவீச்சில் சாய் கிஷோர் 5, வருண் சக்ரவர்த்தி 3, முகமது, நடராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய தமிழகம் 34.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. பாலசந்தர் அனிருத் 40, ஷாருக் கான் 20, கவுஷிக் காந்தி 18, அபராஜித் 17, முகமது 22*, நடராஜன் 7* ரன்  எடுத்தனர். ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற தமிழக அணி 4 புள்ளிகள் பெற்றது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The downfall, Rajasthan , Tamil Nadu
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்