சொல்லிட்டாங்க...

ராகுல்காந்தி மத்திய அரசு மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே ரபேல் விமானம் குறித்து அளித்த பேட்டிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது.

- மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

உச்ச நீதிமன்றம், தேர்தல் கமிஷன் போன்ற அமைப்புகளை, ஆர்.எஸ்.எஸ். சதி செய்து கைப்பற்றுகிறது.

- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

கருணாஸுக்கு ஒரு சட்டம், எச்.ராஜா; எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற அதிமுக அரசின் பாகுபாடான போக்கு மிகவும் அநீதியானது.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் பாரதிய ஜனதாவை அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது.

- தமிழக பாஜ தலைவர் தமிழிசை

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: