ரபேல் போர் விமான ஊழல் ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் பெற மோடி செய்த சதி: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: ரபேல் போர் விமானம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் பெற மோடி செய்த சதி என அறப்போர் இயக்கம்  குற்றம்சாட்டியுள்ளது. ரபேல் போர் விமானம்  வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக, அறப்போர் இயக்கம் சார்பில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செய்தியாளர்களை சந்திது   கூறியதாவது: இந்திய விமானப்படைக்கு 126 போர் விமானங்கள் தேவைப்பட்டது. இதனையடுத்து பிரான்ஸ் நாட்டுடன், இந்தியா ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பில் பறக்கும் நிலையில்  உள்ள 18 விமானங்களும், 108 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும்படியும் ஒப்பந்தம் போடப்பட்டு நிலுவையில் இருந்தது. இதற்கு டசால்ட் ஏவியேசன்  நிறுவனமும், எச்.ஏ.எல் நிறுவனமும் கூட்டு தயாரிப்பில் ஈடுபட இருந்தது. இந்தநிலையில் 126 விமானத்துக்கு போடப்பட்டிருந்த ஒப்பந்ததை ரத்து செய்து, கடந்த 2015 ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி, பிரான்ஸ் அரசிடம் இருந்து முழுவதும்  தயாரிக்கப்பட்டு பறக்கும் நிலையில் உள்ள 36 போர் விமானங்களை, ஒரு விமானம் 16 ஆயிரத்து 60 கோடி மதிப்பில் வாங்குவதாக ஒப்பந்தம் செய்தார்.

மேலும் டசால்ட்  ஏவியேசன் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு தயாரிப்பில் ஈடுபட, விமான தயாரிப்பில் எந்த முன் அனுபவமும் இல்லாத, புதிய நிறுவனத்தை தொடங்கி 15 நாளே ஆன  அனில் அம்பானியின் ரிலையனஸ் டிபன்ஸ் என்ற நிறுவனத்தை பிரதமர் மோடி தான் பரிந்துரை செய்துள்ளார். மோடி இரு நாட்டு அரசுக்கும் இடையேயான ஒப்பந்தம்  என்று கூறி, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு லாபம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஒப்பந்ததை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே அனைத்து தொழிலிலும் நஷ்டத்தை அடைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார் மோடி. இந்த ஊழல்  நிர்மலா சீதாராமனின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்பில்லை.ரிலையன்ஸ் ஆதாயத்திற்காகவே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: