தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசிய மணல் காமராஜர் துறைமுகம் வந்தது

* ஒரு யூனிட் ரூ.10 ஆயிரம்

* பொதுப்பணித்துறை திட்டம்

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மணல் தட்டுப்பாட்டை போக்கும்வகையில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல், கப்பல் மூலம்  காமராஜர் துறைமுகத்துக்கு நேற்று வந்தது. தமிழ்நாட்டில் ஆற்று மணல் கொள்ளை, குவாரிகள் மூடியது, எம்.சான்ட் மண் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாராளமாக கிடைப்பதில் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுமான தொழில்கள் முடங்கியுள்ளன. மணல் லாரி உரிமையாளர்களும் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் முதல் கட்டமாக  மலேசியாவில் இருந்து 56,750 மெட்ரிக் டன் மணல் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஹரீலியா (AURELIA) கப்பல் நேற்று முன்தினம் நள்ளிரவு எண்ணூர் காமராஜர்  துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த மணலை கப்பலில் இருந்து இறக்கும் பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கப்பலில் இருந்து மணல்  இறக்கும் பணிகள் முடிவடைந்ததும் இந்த மணல் ஆன்லைன் மூலம் விற்பனை  செய்யப்படும். ஒரு யூனிட் மணல் விலை ரூ.10,000 என நிர்ணயிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது. தற்போது 56,750 மெட்ரிக் டன் மணல் வந்துள்ளது. மேலும் மூன்று லட்சம் டன் வரை மணல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று  பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: