×

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

காங்டாக்: சிக்கிம் மாநிலத்துக்கு புதிய விமான நிலையத்தை நாளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். சிக்கிம் மாநிலத்துக்கு இதுவரை விமான போக்குவரத்து இல்லாத நிலையை போக்க தலைநகர் காங்டாங் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாக்யாங் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பசுமை விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை முயற்சியாக விமானங்கள் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி 23-ம் தேதி (இன்று) திறந்து வைப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து சிக்கிம் மாநிலம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாக்யாங் நகரில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை நாளை காலை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த புதிய விமான நிலையத்தில் அக்டோபர் 4-ம் தேதியில் இருந்து விமானப் போக்குவரத்து தொடங்குகிறது. முதல்கட்டமாக கொல்கத்தா, டெல்லி, கவுகாத்தி ஆகிய நகரங்களில் இருந்து உள்நாட்டு விமானச் சேவையும். படிப்படியாக, வங்காளதேசம், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து சர்வதேச விமானச் சேவைகளும் இங்கு இயக்கப்பட உள்ளது.

புதிய விமான நிலைய சிறப்பு அம்சங்கள்
:

* சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம்.

* இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் சுமார் 605 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.  

* 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் விமான நிலைய நிர்வாக கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

* உலகிலேயே முதன்முறையாக இந்த விமான நிலையத்தின் தடுப்பிச் சுவர் 80 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

* 30 மீட்டர் அகலத்தில் சுமார் 1.75 மீட்டர் நீளத்துக்கு இங்கு ஓடிபாதை அமைக்கப்பட்டுள்ளது.

* கூடுதலாக 0.75 மீட்டர் நீளத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் விமானப்படை விமானங்களும் இங்கு தரையிறங்கலாம்.

* விமானங்களை நிறுத்தி வைக்கும் இடத்துக்கு கொண்டு செல்ல 116 மீட்டர் தூரத்துக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

* 106 மீட்டர் நீளத்தில் 76 மீட்டர் அகலத்தில் இரு பெரிய விமானங்களை நிறுத்தி வைக்கும் இடமும் இங்குள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gangtok, Sikkim, airport, tomorrow, prime minister Modi
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...