ஆந்திராவில் MLA, EX-MLA சுட்டுக்கொலை: ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை தீ வைப்பு எரித்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகிய இருவரையும் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அரகு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ., சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமா ஆகிய இருவரும் தும்பிரிகுடா என்னுமிடத்தில் சென்று கொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் எம்எல்ஏ.,சர்வேஸ்வர ராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து கோபமடைந்த எம்எல்ஏ ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ.வுக்கு போதுமான பாதுகாப்பு தரவில்லை என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சில பழங்குடியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுட்டதுடன் கடுமையாக தாக்கினர்.

இதனையடுத்து அரக்கு மற்றும் தும்ரிகுடா காவல் நிலையங்களுக்குள் நுழைந்து எம்எல்ஏ ஆதரவாளர்கள் அங்கிருந்த பொருட்களை எல்லாம் சூறையாடியதுடன் தீயிட்டு எரித்தனர். காவல் நிலையம் மற்றும் அதன் அருகாமையில் இருந்த வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் MLA, EX-MLA சுட்டுக்கொலை: ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை தீ வைப்பு எரித்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகிய இருவரையும் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அரகு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ., சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமா ஆகிய இருவரும் தும்பிரிகுடா என்னுமிடத்தில் சென்று கொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் எம்எல்ஏ.,சர்வேஸ்வர ராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து கோபமடைந்த எம்எல்ஏ ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ.வுக்கு போதுமான பாதுகாப்பு தரவில்லை என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சில பழங்குடியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுட்டதுடன் கடுமையாக தாக்கினர்.

இதனையடுத்து அரக்கு மற்றும் தும்ரிகுடா காவல் நிலையங்களுக்குள் நுழைந்து எம்எல்ஏ ஆதரவாளர்கள் அங்கிருந்த பொருட்களை எல்லாம் சூறையாடியதுடன் தீயிட்டு எரித்தனர். காவல் நிலையம் மற்றும் அதன் அருகாமையில் இருந்த வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: