முஸாப்பர்புர்: புதிய படத்துக்கு மதஉணர்வை புண்படுத்துவதுபோல் டைட்டில் வைத்ததாக நடிகர் சல்மான்கான் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தி நடிகர் சல்மான்கான் ‘லவ்ராத்ரி’ பெயரில் புதிய இந்தி படம் தயாரிக்கிறார். ஆயுஷ் சர்மா, வாரினா ஹுசைன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அபிராஜ் மின்யவாலா இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் இந்துக்களின் நவராத்திரி விழாவை கிண்டல் செய்வதுபோல் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த டைட்டிலுக்கு தடை விதிக்க வேண்டும், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸரில் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது என்று சுதிர்குமார் ஓஜ்ஹா என்பவர் கடந்த வாரம் சப் டிவிஷனல் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.