×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வாலா தலைமையிலான வல்லுநர் குழு ஆய்வு

தூத்துக்குடி: தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி 3 பேர் கொண்ட வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்  ஆய்வு மேற்கொண்டுள்ளனர். உடன் ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆய்வுக்கு பின்னர் அவர்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளனர். தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான 3 பேர் குழு நேற்று மாலை தூத்துக்குடி வந்தனர்.

இதனையடுத்து ஸ்டெர்லைட் காப்பர் கழிவுகளை கொட்டும் இடத்தை வல்லுநர் குழு நேற்று மாலை ஆய்வு செய்தது. இதனையடுத்து இன்று காலை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வுக்குழு ஆய்வு செய்து வருகிறது, பின்னர் தூத்துக்குடி நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 11.30 மணிக்கு பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்க உள்ளதாகவும் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

பசுமைத் தீர்ப்பாய குழுவின் கருத்துக்கேட்புக் கூட்டம் பற்றி ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்கப்படுவதாகவும், ஸ்டெர்லைட் வழக்குகளில் தொடர்புடையவர்களும், சம்மந்தப்பட்ட தரப்புகளும் பங்கேற்கும் வகையில், சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sterlite Plant, Tarun Agarwal, Expert Group, Collector Sandeep Nanduri
× RELATED கிருஷ்ணகிரியில் நாளை ஒரே நாளில் 1...