முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறு பேச்சு..... எம்.எல்.ஏ. கருணாஸ் கைது

சென்னை: நடிகரும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக காவல்துறையை நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் அவதூறாக பேசியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் யூ டியூப் மற்றும் பிற பிரபல சமூக வலைதளங்களில் பரவின. முதல்வர் பழனிசாமி, தன்னை பார்த்து பயப்படுவதாகவும் இந்த அரசு அமைய தான் முக்கிய பங்கு வகித்ததாக கருணாஸ் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாது காவல்துறை அதிகாரியிடமும் யூனிபார்மை கழற்றிவிட்டு வந்து மோத தயாரா என்று சவாலும் விடுத்திருந்தார்.

இதனையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆதரவாளர்கள் கருணாஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். கருணாஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்படி எதிர்கொள்வேன்: கருணாஸ்

கைது செய்யப்பட்டபோது செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் கூறியதாவது: என் மீதான வழக்கை நான் நேரடியாக நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வேன். என்னை கைது செய்ய சபாநாயகரிடம் காவல்துறை அனுமதி பெற்றதா என தெரியவில்லை. பேச்சுரிமைக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் சட்டத்தை மதிப்பவன் நான். கொலை முயற்சி வழக்கு போடும் அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: