பசு சாணம், கோமியத்தில் சோப்பு, ஷாம்பு தயாரிப்பு

மதுரா: உபி.யின் மதுராவில், ‘தீன்தயாள் தாம்’ என்ற மையம் செயல்படுகிறது. ஆர்எஸ்எஸ் சார்ந்த இந்த அமைப்பு அழகு, சுகாதாரம், ஆடைகள் உள்ளிட்ட ஒரு டஜன் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அந்த மையத்தின் மேலாளர் கன்சியாம் குப்தா தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: பசுவின் சாணம், கோமியம் ஆகியவற்றால் ஆன சோப்பு, முகப்பவுடர், ஷாம்பு மற்றும் மருத்துவ தயாரிப்புகளை தயாரித்து வருகிறோம். இதனை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது தொடர்பாக அமேசான் வர்த்தக நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினோம். தற்போது அவை விற்பனைக்கு வந்துள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: