தனியார் மருத்துவமனைகளில் அரசு டாக்டர் பணிபுரியலாமா? : அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

நாகர்கோவில்:  அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடாது என்பது போன்ற கேரளாவின் நிலையை தமிழகத்தில் ெகாண்டு வர வாய்ப்பில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், நேற்று காலை  நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 100 இடங்கள் உள்ளன. இதை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி கூடுதலாக 50 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு விபத்து சிகிச்சை பிரிவு அமைக்கப்பட

உள்ளது.ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ₹11 கோடியே 82 லட்சம் செலவில் நவீன உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன. இதயநோய் சிகிச்சைக்கான ஆஞ்சியோகிராம் சிகிச்சை பிரிவு ₹3.5 கோடியில் துவங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு மட்டும் இந்த மருத்துவமனைக்கு ₹17 கோடியே 23 லட்சம் செலவில் பல்வேறு உபகரணங்கள், சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 6 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் மகப்பேறு இறப்புகள் எதுவும் இல்லை. இது பாராட்டுக்கு உரிய விஷயம். தமிழகத்தில் அரசு டாக்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

கேரளாவில் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடாது என்பது போன்ற நிலையை தமிழகத்தில் ெகாண்டு வர வாய்ப்பில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: