8 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

சென்னை: சென்னையில் நேற்று 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ராயப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம், திருவேற்காடு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், காசிமேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி, மாங்காடு குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதேபோன்று காசிமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், காசிமேடு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், அம்பத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பாண்டிபஜார் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாண்டிபஜார் சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவ சுப்பிரமணியன் அம்பத்தூர் குற்றப்பிரிவுக்கும், கோயம்பேடு சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழழகன் காசிமேடு குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ், பூக்கடை காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளார். மாங்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேற்றிரவு பிறப்பித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: