ஆஸ்கர் விருதுக்கு அசாம் படம் தேர்வு

புதுடெல்லி: உலகின் முதன்மையான சர்வதேச அளவிலான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, ஆஸ்கர் விருது விழா.  இது ஆண்டுதோறும் அமெரிக்காவில் நடக்கும்.  ஹாலிவுட் படங்களுக்கான விருது என்றாலும்,  வெளிநாட்டு படங்கள் பிரிவில் மற்ற நாட்டு படங்களும் கலந்துகொள்ளும். 91வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்க உள்ளது. இதில் வெளிநாட்டு பிரிவில் போட்டியிடும் பட பிரிவிற்காக, இந்தியாவில்  இருந்து அசாம் மொழி படமான ‘‘வில்லேஜ் ராக்ஸ்டார்’’ தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை இந்திய திரைப்பட சம்மேளனம் அறிவித்துள்ளது.

வறுமையில் இருக்கும் சிறுமி, ஒரு இசைக்குழு உருவாக்க முயற்சித்து, கிடார் இசைக்கருவி வாங்க நினைக்கிறார். ஆனால், வறுமை தடையாக இருக்கிறது. அதை வென்று, தான் நினைத்ததை சாதித்தாளா என்பது கதை. ரிமா  தாஸ் இயக்கத்தில் பஹனிதா தாஸ், மகேந்திர தாஸ் நடித்துள்ளனர். தேசிய விருது உள்பட பல விருதுகளை இந்த படம் பெற்றுள்ளது. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பஹனிதா தாஸ் பெற்றுள்ளார்.  ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான போட்டியில், தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் உள்பட 28 படங்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: