×

செண்டு மல்லி கிலோ ரூ.200ஆக சரிவு

சேலம்: சேலம் சுற்று வட்டார பகுதியில் செண்டு மல்லி விளைச்சல் அதிகரித்துள்ளதால், உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் புலம்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக சேலம் சுற்று வட்டார பகுதியில் செண்டு மல்லி பூவின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உரிய விலை கிடைக்கவில்லை என்று பூ விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து கன்னங்குறிச்சியைச் சேர்ந்த பூ விவசாயிகள் கூறியதாவது:செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரு மாதங்களிலும் செண்டு மல்லி பூவின் விளைச்சல் அதிகமாக இருக்கும். தற்போது அனைத்து பகுதியிலும் செண்டு மல்லி நல்ல முறையில் பூத்துள்ளது. இதன் காரணமாக பூ மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட வரத்து 40 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் செண்டு மல்லிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பு ஒரு கிலோ செண்டு மல்லி ₹400 வரை விற்றது. பூ விளைச்சல் அதிகமானதன் காரணமாக படிப்படியாக விலை குறைந்து, நேற்றயை நிலவரப்படி கிலோ ₹200 என விற்பனை செய்யப்பட்டது். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bouquet coriander yield, 200, Gradient
× RELATED கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 210...