நெல் வரத்து குறைவு எதிரொலி : அரிசி விலை உயர தொடங்கியது.... மூட்டைக்கு ரூ.50 வரை அதிகரிப்பு

சென்னை: நெல் வரத்து குறைவு எதிரொலியாக அரிசி விலை உயர தொடங்கியது. மூட்ைடக்கு திடீரென ரூ.50 வரை விலை உயர்ந்தது. இன்னும் 2 மாதங்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.அதிக நெல் வரத்து காரணமாக கடந்த சில மாதமாக அரிசி விலை குறைந்து வந்தது. இந்த நிலையில் தற்போது நெல்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால், அரிசி மூடைக்கு ரூ.50 வரை திடீரென உயர்ந்துள்ளது.அதாவது ஏ.டி.டி.47 ரக பொன்னி, கோ 51 ரக அரிசி 25 கிலோ மூடை ரூ.600லிருந்து ரூ.650 ஆகவும், 2ம் ரகம் ரூ.575லிருந்து ரூ.620 ஆகவும் உயர்ந்துள்ளது. இட்லி அரிசி(1ம் ரகம்) ரூ.600லிருந்து ரூ.650, இட்லி அரிசி(2ம் ரகம்) ரூ.580லிருந்து ரூ.620, ரூபாலி பொன்னி ரூ.680லிருந்து ரூ.720, அதிசய பொன்னி ரூ.700லிருந்து ரூ.750 ஆக விலை உயர்ந்துள்ளது.

பாபட்லா பொன்னி ரூ.1,050லிருந்து ரூ.1,100, பாபட்லா ெபான்னி(2ம் ரகம்) ரூ.850லிருந்து ரூ.900, சோனா என்ற பொன்னி ரூ.1200லிருந்து ரூ.1250, சோனா என்ற பொன்னி(2ம் ரகம்) ரூ.1000லிருந்து ரூ.1050 ஆகவும் விலை உயர்ந்துள்ளது என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் சொரூபன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மேலும் நெல்வரத்து குறைய வாய்ப்புள்ளது. அதன் பிறகு டிசம்பர், ஜனவரி மாதத்தில்தான் புது நெல்வரத்து வரத் தொடங்கும் அதன் பிறகே விலை குறையும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: