ஜொள்ளு...ஏ.சி.., எஸ்கேப் பி.சி.,...!

கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனராக நிலவு பெயர் கொண்டவர் உள்ளார். இவர், எஸ்.ஐ.யாக பணியில் சேர்ந்து படிப்படியாக பதவிஉயர்வு பெற்று இப்பொறுப்பில் உள்ளார். இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக  இப்பிரிவில் பணியாற்றுகிறார். இவர், தனக்கு கீழ் நிலையில் பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் முதல், பெண் காவலர் வரை ஜொள்ளு விடுவது வழக்கமாகிவிட்டது. இரட்டை அர்த்தத்தில் பேசுவதும் தொடர்கிறது.  இவருக்கு அடிபணிய மறுக்கும் பெண் போலீசாருக்கு, கூடுதல் பணி ஒதுக்குவதுடன், நைட் ஷிப்டும் போட்டு விடுகிறார்.

சமீபத்தில், ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் அறைக்கு இவர் நேரில் சென்று, அவரிடம் ஜொள்ளு விட்டுள்ளார். அவரோ, தனது உயரதிகாரி என்றும் பாராமல் திட்டி அனுப்பிவிட்டார். அசடு வழிந்த ஏ.சி., அங்கிருந்து  வெளியேறினார். ஆனாலும், தன்னை திட்டிய அந்த பெண் இன்ஸ்பெக்டரை பழி வாங்க துடித்து வருகிறார். அவரோ, துணை கமிஷனர் உதவியை நாடி, வேறு இடத்திற்கு பணியிட மாறுதல் வாங்கிச்சென்றுவிட்டார். ஜொள்ளு ஏ.சி.,  ஆட்டம் அதிகமாகிவிட்டதால் பெண் காவலர்கள் (பி.சி.) எல்லோரும் நடுக்கத்தில் உள்ளனர். அவரை நேருக்கு நேர் பார்க்காமல், தப்பி ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: