மகாராஷ்டிராவின் 23 மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ,90-ஐ தாண்டியது

மும்பை: மகாராஷ்டிராவில் மொத்தம் 36 மாவட்டங்கள் உள்ளன. இதில் 23 மாவட்டங்களில் 90 ரூபாய்க்கும் அதிகமாக பெட்ரோல் விற்பனையாகிறது. டீசல் விலையில் நேற்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வழக்கம்போல நேற்றும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. நேற்று முன்தினம் மும்பையில் பெட்ரோல் விலை ₹89.69 ஆக இருந்தது. நேற்று 11 காசுகள் அதிகரித்து ₹89.80 ஆக உயர்ந்தது. டீசல் விலை ₹78.42 ஆக நேற்று மும்பையில் நீடித்தது. மாநிலத்திலேயே நாண்டெட் மாவட்டத்தில் நேற்று பெட்ரோல் விலை ₹92.55 ஆக இருந்தது. அதற்கடுத்ததாக பர்பனி மாவட்டத்தில் பெட்ரோல் விலை ₹91.58 ஆக இருந்தது. சென்னையில் நேற்று பெட்ரோல் 11 காசு உயர்ந்து ₹85.69க்கும், டீசல் மாற்றமின்றி ₹78.10க்கும் விற்கப்பட்டது.

இந்திய அளவில் மகாராஷ்டிராவில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது மகாராஷ்டிரா அரசு 39 சதவீத வரி வசூலிக்கிறது. இதில் வாட் உள்ளிட்ட வெவ்வேறு வரிகளும் அடங்கும். வறட்சி நிவாரண வரியாக ₹3, நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட ₹3 வரி, கல்வி, ஸ்வட்ச் பாரத் திட்டம், விவசாயிகள் நலத்திட்டங்களுக்கு தலா ₹1 வீதம் மாநில அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது வரி வசூலிக்கிறது. இதுதான் மற்ற மாநிலங்களை விட மகாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மூடப்பட்ட மதுக்கடைகளுக்காக ரூ.3 வசூலிக்கும் ஒரே மாநிலம் மகாராஷ்டிராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: