துப்பாக்கிசுடுதலில் சாதிக்கும் சென்னை இளைஞர்

சென்னை மாற்றுத்திறனாளிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னையை சேர்ந்த ஆதித்யா கிரி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறார்.சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் ஆதித்யா கிரி (19). மாற்றுத்திறனாளியான இவர் மற்றவர்கள் போல் பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லை. இடுப்புக்கு கீழ் எந்த செயல்பாடும் இல்லாததால் பெற்றோர்களின் உதவியில்லாமல் இயங்குவது சிரமம். ஆனாலும் வீட்டிலிருந்தபடியே படித்து இப்போது பிகாம் 2ம் ஆண்டு அஞ்சலில் படிக்கிறார்.   அதேபோல் விளையாட்டில் ஆர்வம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக துப்பாக்கிசுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.மேலும் கடந்த ஓராண்டாக மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். அகில இந்திய 28வது மாவளங்கர் துப்பாக்கிசுடும் போட்டியின் 10 மீட்டர் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவுகளில்  ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றார்.சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான 44வது துப்பாக்கிச்சுடும் போட்டியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் 2 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.   இது குறித்து கூறுகையில் ‘போரூர் ராமசந்திராவில் உள்ள ஜிஎப்ஜி  துப்பாக்கிசுடும் மையத்தில் பயிற்சி பெற்று வருகிறேன். கடந்த ஓராண்டாக ரமன்பிரீத் கவுர் எனக்கு பயிற்சி அளித்து வருகிறார். சர்வதேச அளவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே இலக்கு’ என்கிறார் கிரி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: