×

சில்லி பாயின்ட்...

n சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தின்போது விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதாக பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஹசன் அலி, ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன், ஆல் ரவுண்டர் ரஷித் கான் ஆகியோருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன் தலா 1 தரக்குறைவு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

n ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன்ஷிப் தோஹாவில் அடுத்த மாதம் 25ம் தேதி தொடங்கி நவம்பர் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான தகுதிப் போட்டிகள் செப். 29, 30ல் நடைபெறும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

n ஐரோப்பிய அணியுடன் உலக அணி மோதும் லேவர் கோப்பை டென்னிஸ் தொடரின் இரட்டையர் ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் ரோஜர் பெடரர் (சுவிஸ்) - நோவாக் ஜோகோவிச் (செர்பியா) ஜோடி, உலக அணியின் கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்ரிகா) - ஜாக் சாக் (அமெரிக்கா) ஜோடியிடம் 7-6, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதல் முறையாக நடைபெறும் இந்த தொடரில் ஐரோப்பிய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

n தோஹாவில் நடைபெற்ற ஆசிய குழு ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் பாகிஸ்தானுடன் மோதிய இந்தியா 2-3 என்ற செட் கணக்கில் போராடி தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது.

n பந்தை சேதப்படுத்த சதி செய்ததாக சர்ச்சையில் சிக்கியதால் சர்வதேச போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித், தற்போது ஆஸி. மண்ணில் நடைபெறும் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறார். சதர்லேண்ட் கிளப் அணிக்காக களமிறங்கிய ஸ்மித் 92 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சர் உட்பட 85 ரன் விளாசினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan all rounder Hasan Ali, Asian team snooker championship, Steve Smith
× RELATED பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை:...