×

தற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது போலீசார் வழக்கு

சென்னை: கொசுமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சின்னத்திரை நடிகை நிலானி மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலஷ்மி நகர் 2வது தெருவில் வசிப்பவர், சின்னத்திரை நடிகை நிலானி (36). இவர் தனது கணவரை பிரிந்து ஒரு மகள், ஒரு மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், சினிமா துணை இயக்குநர் காந்தி லலித்குமாரை நிலானி காதலித்துள்ளார். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல், இந்த வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஒன்றாக இருப்பது போன்ற போட்ேடாக்கள் பேஸ்புக், வாட்ஸ்அப்களில் வெளியாகி சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நிலானியை காந்தி கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் திருமணத்துக்கு நிலானி மறுத்தார். மேலும் அவருடன் பேசுவதை குறைத்ததுடன், வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக தெரிகிறது. இதனால் நிலானி செல்லும் இடங்களில் எல்லாம் காந்தி சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளான். இதனால் டென்ஷனான நிலானி, காந்தி மீது தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும், தன்னை நடிக்க விடாமல் தடுப்பதாகவும் நிலானி போலீசில் புகாரும் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் காந்தியை ஏற்கனவே ஒருமுறை நேரில் அழைத்து விசாரித்து, எழுதி வாங்கி உள்ளனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் மயிலாப்பூரில் நடந்த ஒரு டிவி ஷுட்டிங்கின்போது தன்னிடம் திருமணம் செய்து கொள்ளும்படி காந்தி தகராறில் ஈடுபட்டதாக மயிலாப்பூர் போலீசில் நிலானி புகார் அளித்தார். இதன் அடிப்படையில், காந்தியை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னை கே.கே.நகரில் ஒரு தனியார் பள்ளி அருகே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து காந்தி தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து காந்தி, நிலானி ஆகியோரின் நெருங்கிய உறவு குறித்து போட்டோக்களும், வீடியோக்களும் பல்வேறு சமூக வலைதளப் பக்கங்களில் வெளியானது. இதுபற்றி நிலானியும் புகார் கொடுத்து விளக்கம் அளித்ததுடன் பேட்டி கொடுத்தார்.இந்த நிலையில், நிலானி, கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்தபோது, கொசுமருந்தை குடித்துவிட்டு அரை மயக்கத்தில் கிடந்தார். இதை பார்த்ததும் அவரது 2 குழந்தைகளும் அலறியடித்து கீழே வந்து  அக்கம்பக்கத்தினிடம் ெதரிவித்தனர். இதையடுத்து அவர்கள் நிலானியை மீட்டு உடனடியாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மதுரவாயல் போலீசார் நிலானி மீது தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வரும் நிலையில் திடீரென தற்கொலை முடிவை நிலானி எடுத்தது ஏன் என்பது குறித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mosquito, suicide, actress nilani
× RELATED காவடி ஆட்டத்துடன் பழநிக்கு புறப்பட்ட தேவகோட்டை பக்தர்கள்