×

பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர் உரிமம் வழங்க கண்காணிப்பு பொறியாளர்களுக்கு தடை: லைசென்ஸ் புதுப்பிப்பதிலும் புதிய நடைமுறை அமல்

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் புதிய ஒப்பந்ததாரர் உரிமம் வழங்க கண்காணிப்பு பொறியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கான்டராக்டர்கள் உரிமம் புதுப்பிப்பதிலும் புதிய நடைமுறை  அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு உள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடம் கட்டுவது, புதிய ஏரி, அணைகள் ஏரிகள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள்  மேற்கொள்ளப்படுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு கான்ட்ராக்டர்கள் மூலம் இப்பணிகள் நடக்கிறது. இவர்கள், தங்களது தகுதிக்கேற்ப ஒப்பந்த விலைப்புள்ளி அடிப்படையில் டெண்டரில் பங்கேற்கலாம்.  அதாவது, ₹75 லட்சத்திற்கு மேல் மதிப்பிலான பணியை எடுக்கும் கான்ட்ராக்டர்கள் முதல் வகுப்பு, 75 லட்சத்திற்கு கீழ் பணியை எடுக்கும் கானட்ராக்டர்கள் இரண்டாம் வகுப்பு, 30 லட்சம் மதிப்பிலான பணியை எடுக்கும்  கான்ட்ராக்டர்கள் மூன்றாம் வகுப்பு, ₹15 லட்சம் மதிப்பிலான பணியை எடுப்பவர்கள் நான்காம் வகுப்பு, ₹6 லட்சம் மதிப்பிலான பணியை ஐந்தாம் வகுப்பு கான்ட்ராக்டர்கள் டெண்டர் எடுக்கின்றனர்.

பொதுவாக, பொதுப்பணித்துறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் எடுக்க விரும்பும் புதிய ஒப்பந்ததாரர்களுக்கு கண்காணிப்பு பொறியாளர், தலைமை பொறியாளர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமே உரிமம் வழங்க  வேண்டும்.தற்போதுஅந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, முதல் வகுப்பு முதல் 5 வகுப்பு கான்ட்ராக்டர்கள் உரிமமம் பெற விரும்புவர்கள் முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்தில்  நேரடியாக விண்ணப்பிக்கலாம்.* கான்ட்ராக்டர்கள் ஒவ்வொரு வருடமும் தங்களது உரிமத்தை முதன்மை தலைமை பொறியாளர்கள் அலுவலகத்தில் புதுப்பிக்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் ஒரு வருடத்திற்குத் தான் பயன்படுகிறது.  அதன்பிறகு புதுப்பிக்கவில்லை என்றால் அவர் டெண்டரில் கலந்து கொள்ள முடியாது.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர்கள் அந்தந்த மண்டல கண்காணிப்பு பொறியாளர், கோட்ட செயற்பொறியாளர்களுக்கு கான்ட்ராக்டர்களின் விவரங்களை வரும் 15ம் தேதிக்குள் அனுப்பி  வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதுவரை கண்காணிப்பு பொறியாளர் மூலமே கான்ட்ராக்டர்கள் உரிமத்தை புதுப்பித்து வந்த நிலையில் தற்போது நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்து இருப்பது ஊழலுக்கு வழிவகுக்கும்  என்று கான்ட்ராக்டர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Contractor , Prohibition ,supervision engineers ,licenses,procedure, license
× RELATED ஊராட்சிகள் வர்த்தக கட்டிடங்களுக்கு...