தேசிய நெடுஞ்சாலை துறையில் முதன்முறையாக தரக்கட்டுபாட்டு பிரிவு: தமிழக அரசு உத்தரவால் நடவடிக்கை

சென்னை: தேசிய நெடுஞ்சாலை அலகில் தரமாக பணிகள் நடக்கிறதா என்பதை கண்காணிக்க முதன்முறையாக தரக்கட்டுபாட்டு பிரிவு ஏற்படுத்தி இருப்பது நெடுஞ்சாலைத்துறையில் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் 5324 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது. இதில், மாநில அரசு கட்டுபாட்டில் 2.39 கி.மீ, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுபாட்டில் 3285 கி.மீ சாலைகளும் உள்ளது. இந்த சாலைகளின் பராமரிப்பு பணிகளை  மேற்கொள்ள வசதியாக கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் நான்கு வட்டங்கள், கோட்ட பொறியாளர்கள் தலைமையில் எட்டு கோட்டங்கள் உள்ளது. இந்த அலகின் மூலம் சாலை மேம்படுத்துதல், பாலங்கள் கட்டுதல்,  சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் பணிகள் நடக்கிறது. இந்த  நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் 8 ேகாட்டங்கள் மட்டுமே இருப்பதால் தமிழக முழுவதும் நடக்கும் சாலை பணிகளை கண்காணிப்பதில் சிக்கல் எழுகிறது. இதனால், சாலை பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளில்  முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை அலகில் 5 புதிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் படி, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், கோபி செட்டிபாளையம், விருதுநகர் உள்ளிட்ட கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.  மேலும் தேசிய நெடுஞ்சாலைக்கென சாலை மற்றும் பாலப்பணிகள் தரமாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க முதன்முறையாக தரக்கட்டுபாட்டு கோட்டங்களும் அமைக்க தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறைக்கு  உத்தரவிட்டது. அதன்படி, சென்னை, சேலம், மதுரை, நெல்லை ஆகிய 4 கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டங்களில் 203 பணியிடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: