×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறநிலையத்துறை ஊழியர்கள் செப்.27ல் உண்ணாவிரத போராட்டம்

* 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்செயல் விடுப்பு எடுக்கவும் முடிவு
* அன்னதான திட்டம் முடங்க வாய்ப்பு

சென்னை:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறநிலையத்துறை ஊழியர்கள் செப்.27ல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்து அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறநிலையத்துறை முதன்மை செயலாளர், ஆணையருக்கு மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறையில் தற்போது நிலவி  வரும் அசாதாரண சூழ்நிலையில் இத்துறை அலுவலர்கள், நிர்வாக அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு இல்லாமல் மிகுந்த மன உளைச்சலில் பணியாற்றும் நிலை இருந்து  வருகிறது.* சில சமூக விரோதிகள் யூகத்தன் அடிப்படையிலான எவ்வித ஆதாரமின்றி அளிக்கப்பட்டு வரும் புகார்கள் தொடர்பாக இத்துறை அலுவலர்கள் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது  நிறுத்தபட வேண்டும்.

* இந்து சமய அறநிலையத்துறையில் சிலைகள் களவு பற்றி தற்போதைய புகார்களின் உண்மை நிலையினை கண்டறிய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர், காவல்துறை உயர்  அலுவலர் ஒருவர் தொல்லியல் துறை வல்லுனர் ஒருவர் மற்றும் இத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற கூடுதல் ஆணையர் நிலையில் ஒருவர் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க தக்க அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  வரும் 27ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத  போராட்டம் நடத்திட அனைத்து அறநிலையத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தவிர்க்க முடியாத நிலையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த போராட்டம் காரணமாக அறநிலையத்துறை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், அன்னதானம் திட்டம், கோயில்களுக்கு  வரும் பக்தர்களுக்கு அர்ச்சனை டிக்கெட் வழங்குவது உள்ளிட்ட பல்ேவறு பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், பக்தர்கள் நலன் கருதி அன்றைய தினத்தில் கோயில்களில் வழக்கம் போல் பூஜைகள் நடக்கும் என்று  கூறப்படுகிறது.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Emphasize various , Citizens' Staff,
× RELATED நாடாளுமன்ற ஊழியர்கள் மேலும் 300 பேருக்கு கொரோனா