ஒரிஜினல் எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் தயாரிக்கும் 16 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்றிதழ்: விரைவில் இணையதளத்தில் பட்டியல் வெளியிட முடிவு

சென்னை: ஒரிஜினல் எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் தயாரிக்கும் 16 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த குவாரிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிடவும் முடிவு  செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆற்றுமணலுக்கு பதிலாக எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் பயன்பாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதைதொடர்ந்து, ஒரிஜினல் எம்சாண்ட் குவாரிகளை கண்டறிந்து அந்த குவாரிகளுக்கு  பொதுப்பணித்துறையின் மூலம் மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, விண்ணப்பித்த எம்சாண்ட் குவாரிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மதிப்பீட்டு சான்றிழ் வழங்கி வருகின்றனர். இந்த  நிலையில் தற்போது வரை 64 குவாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 44 எம்சாண்ட் குவாரிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதிப்பீட்டு சான்றிதழ் கேட்டு  விண்ணப்பிக்காத 256 குவாரி உரிமையாளர்கள், 800 எம்சாண்ட் உற்பத்தியார்களுக்கு கடந்த ஜூலை 6ம் தேதி பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

அதன் பேரில் 65 குவாரிகள் மதிப்பீட்டு சான்றிதழ் வழங்க கோரி தொழில் நுட்ப வல்லுனர்கள் குழுவுக்கு விண்ணப்பித்துள்ளது. அந்த குவாரிகளில் தயாரிக்கப்படும் எம்சாண்ட் மணலை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அந்த ஆய்வு முடிவில் கிடைத்த அறிக்கையின் பேரில் 16 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் மனோகரன் தலைமையில் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை, சிஎம்டிஏ, நகர் ஊரமைப்பு இயக்ககம்,  அண்ணா பல்கலை, மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ், இந்திய தரகட்டுபாட்டு நிர்ணயம், இந்திய பில்டர் அசோசியேஷன், ஐஐடி உள்ளிட்ட 22 பேர் அடங்கிய தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் 16 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த குவாரிகளில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான பணிக்கு மணல் எடுக்க  அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் அந்த குவாரிகளில் மணல் பெற வசதியாக விரைவில் இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: