×

சென்னை- கூடூர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை,: சென்னை- கூடூர் இடையே இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தடா-சூலூர்பேட்டை இடையே  பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7ம் தேதி வரை 14 நாட்களுக்கு நள்ளிரவு 1.05 மணி முதல் காலை 6 மணி வரை புறநகர் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 4.40 மணிக்கு சூலூர்பேட்டைக்கு புறப்படும் ரயில் மேற்கண்ட 14 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் சூலூர்பேட்டையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயக்கப்படும்  மின்சார ரயில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் ரயில்நிலையம் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai kutur, train service, change
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...