வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் ஒடிசா அருகே சமீபத்தில் புயல் உருவானது. ஆனால் புயல் ஒடிசாவை கடந்து வடக்கு திசையில் மத்தியபிரதேசம் நோக்கி சென்றது.இதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யவில்லை. அதேசமயம், வெப்பச்சலனத்தால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்கிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: