காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை ஜெயந்தி ஆண்டாக உலகமெங்கும் கொண்டாட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை ஜெயந்தி ஆண்டாக உலகமெங்கும் கொண்டாட வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் 2018 அக்டோபர் 2ம் நாள் வருகிறது. அன்று தொடங்கி ஓராண்டு முழுவதும் அவரின் 150வது ஜெயந்தி ஆண்டாக அகிலமெங்கும் கொண்டாடப்பட வேண்டும். குறிப்பாக இந்தியாவிலும்,  தமிழகத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும்.  இதனை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு முதல் கட்டமாக தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆலோசனைக் குழுக்கள், செயற்குழுக்கள்  அமைக்கப்பட வேண்டும். அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்களையும் அழைத்து கலந்துரையாட வேண்டும். காந்தியின் பெயரால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். மதுக்கடைகளை மூடுவடு அதில் முன்னுரிமை  பெற வேண்டும். விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

காந்தியடிகளின் 150வது பிறந்த நாளையும், அந்த ஆண்டையும் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும். இதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ₹150 கோடி போதுமானதல்ல. மாநில அரசுக்கும் சிறப்பு ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

இதற்கான திட்டங்களைத் தீட்டி அறிவித்து, அக்டோபர் 2ம் நாள் முதல் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.  மத்திய மாநில அரசுகள் காந்தியடிகளின் பிறந்த நாளை மிகச்சிறப்பாக ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: