மஜத எம்எல்ஏக்கள் 20 பேர் மாயம்....கர்நாடகாவில் ஆட்சி கவிழ்கிறது? : முதல்வர் குமாரசாமி அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவில் மஜத எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு எதிர்பார்த்த அளவு கணிசமான எம்.எல்.ஏ.க்கள் வராததை அறிந்த காங்கிரசார் முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார்கள்.கர்நாடகாவில், ஆளும் காங்கிரஸ்- மஜத கூட்டணி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாஜவினர் முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதனிடையே நேற்று மஜத எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டம் ஹாசனில் நடந்தது. மாலை 6 மணி ஆகியும் 37 எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் மட்டும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். 20 பேர் கூட்டத்துக்கு வரவில்ைல.

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வராததால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் குமாரசாமி மற்றும் அமைச்சர் ரேவண்ணா ஆகியோரும் உரிய நேரத்திற்கு கூட்டத்திற்கு வரவில்லை என தகவல்கள் வெளியானது. 20 எம்.எல்.ஏ.க்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் தெரியாமல் மஜதவினர் திகைத்துப்போயினர். ஒரு கட்டத்தில், ‘‘மஜதவை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், என்னிடம் கூறிவிட்டுத்தான் வெளியூர் பயணம் செய்துள்ளனர்’’ என முதல்வர் குமாரசாமி விளக்கம் அளித்தார். இருந்தாலும், எம்.எல்.ஏ.க்கள் என்ன ஆனார்கள் என்ற பீதி மஜதவினர் இடையே காண முடிந்தது. இதன் இடையே மஜத எம்.எல்.ஏ.க்கள் காணாமல் போனதை அறிந்த காங்கிரசார் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் காவிரி இல்லத்தில் கூடினர். இதிலும் 3 எம்எல்ஏ.க்கள் பற்றி சந்ேதகம் எழுந்தது. இந்நிலையில், அந்த 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் துணை முதல்வர் பரமேஸ்வர் தனது காரில் அழைத்துக்கொண்டு சித்தராமையா வீட்டுக்கு வந்தார். இந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சித்தராமையா அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இதற்கிடையே, சந்தேகத்துக்கு ஆளாகி இருக்கும் மஜத எம்.எல்.ஏ.க்கள் சென்னை வழியாக விமானம் மூலம் மும்பைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே பீதி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  ரபேல் போர் விமானத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் ஆட்டம் காட்டிவருவதால், கர்நாடக அரசை கவிழ்க்க பாஜ சதி செய்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: